டுகாட்டி சூப்பர்பைக் தயாரிப்பாளரின் மிகவும் சக்திவாய்ந்த டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக் மிலன் நகரில் நடைபெறும் இஐசிஎம்ஏ 2016 அரங்கில் வெளியாகியுள்ளது. பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் $80,000 (ரூ.60 லட்சம்) ஆகும்.
சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த பைக்காக விளங்கும் டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக் மொத்தமாக 500 அலகுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. சக்திவாய்ந்த எஞ்சின் மட்டுமல்லாமல் அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் நுட்பங்களை பெற்று விளங்குகின்றது.
மிக இலகுவான 150 கிலோ எடை கொண்ட பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 215 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1285cc சூப்பர்குவாட்ரோ எஞ்சினை பெற்றுள்ளது. மேலும் ரேசிங் கிட் உதவியுடன் 5 ஹெச்பி வரை ஆற்றலை அதிகரித்து 220 ஹெச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 147 நியூட்டன் மீட்டர் ஆகும்.
இலகுவான எடை மற்றும் உறுதியான கட்டமைப்பினை வெளிப்படுத்தும் நோக்கில் உயர்தர கார்பன் ஃபைபரினை கொண்டு பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக்கின் மோனோகூ ஃபிரேம் , ஸ்வின்கிராம் மற்றும் வீல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதரன பனிகேல் 1299 மாடலைவிட 6 கிலோ எடை குறைவானதாக விளங்குகின்றது.
பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா
டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக்கில் இடம்பெற்றுள்ள நவீன 1299’s six-axis IMU வாயிலாக வேகமான செயல்பாட்டினை சிறப்பாக வழங்கும் வகையில் உதவி புரியும். DTC EVO (Ducati Traction Control ) எனப்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் உதவியுடன் IMU ( Inertial Measurement Unit) செயல்பட்டு பைக்கின் சக்கரங்களின் செயல்பாடு மற்றும் எஞ்சின் ஆற்றல் உற்பத்தி போன்றவற்றை கையாளும் வகையில் அமைந்துள்ளது. இதில் டுகாட்டி ஸ்லைட் கன்ட்ரோல் , பவர் லேன்ச், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் என பல நவீன வசதிகளை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலாகும்.
500 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா விலை அமெரிக்க டாலர் மதிப்பில் $80,000 (ரூ.60 லட்சம்) ஆகும். ஆனால் 500 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக டுகாட்டி தெரிவித்துள்ளது.