ஹீரோவின் பிரசத்தி பெற்ற கரீஸ்மா XMR 210 மாடலில் மேம்பட்ட காம்பேட் எடிசன் மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான டாப், பேஸ் என மொத்தமாக மூன்று வேரியண்டுகளை பெற்று விலை ரூ.1,81,400 முதல் ரூ.2,01,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
210cc லிக்யூடு கூல்டு எஞ்சினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்எம்ஆர் 210 மாடலில் தற்பொழுது பேஸ், டாப் மற்றும் காம்பேட் என மூன்று வேரியண்டுகள் கிடைக்கின்ற நிலையில் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று நிறங்களுடன் டாப் காம்பேட் வேரியண்டில் கிரே நிறத்துடன் வந்துள்ளது.
டாப் வேரியண்டில் புதிய 4.2 அங்குல TFT கிளஸ்ட்டருடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால், எஸ்எம்எஸ் அலர்ட் என சுமார் 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்றது. பேஸ் வேரியண்டில் வழக்கமான எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டிருந்தாலும் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளது.
முன்புறத்தில் 300 mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 mm டிஸ்க் பெற்று கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் ரோடு, ரேலி மற்றும் புரோ என மூன்று விதமான மோடுகளை பெற்று முன்புறத்தில் 100/80-17 மற்றும் பின்புறத்தில் 140/70-17 டயர் கொண்டுள்ளது.
- Karizma XMR 210 Base – ₹ 1,81,400
- Karizma XMR 210 Top – ₹ 1,99,750
- Karizma XMR 210 Combat – ₹ 2,01,500
(All price ex-showroom)