ஸ்கோடா ஆட்டோவின் புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை மே 2025 இறுதிக்குள் டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ளது.
கைலாக் ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரையிலான அறிமுக சலுகை விலையை ஏப்ரல் 2025 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் மேலும் முன்பதிவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை கடந்துள்ள ஸ்கோடா வரலாற்றில் மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை முதன்முறையாக 7,422 யூனிட்டுகளை டெலிவரி என்ற அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
MQB A0 பிளாட்ஃபாரத்தில் பெறப்பட்டுள்ள MQB 27 பிளாட்ஃபாரதில் வடிவமைக்கப்பட்டுள்ள கைலாக்கில் 15bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
பாரத் NCAP டெஸ்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ள இந்த மாடலுக்கு போட்டியாக 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள நெக்ஸான், XUV 3XO, பிரெஸ்ஸா, சொனெட், சிரோஸ், வெனியூ உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.