தனிநபர் மற்றும் சரக்கு பயன்பாட்டுக்கு ஏற்ற பல்வகை வசதியினை பெற்றுள்ள ஐஷர்-போலரிஸ் கூட்டணியில் உருவான ஐஷர் மல்டிக்ஸ் வாகனத்தில் பிஎஸ்4 (BS IV) மாசு கட்டுப்பாடுக்கு ஏற்ற டீசல் இன்ஜினை பெற்ற மாடல் ரூ.3.43 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில் 30க்கு மேற்பட்ட நகரங்களில் விற்பனையில் உள்ள மல்டிக்ஸ் பல சிறப்புவ வசதிகளை கொண்ட பல பயன்களை தருகின்ற மாடலாகும். 511சிசி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 27கிமீ ஆகும். 1918 லிட்டர் கொள்ளளவுடன் 5 நபர்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மல்டிக்ஸ் வாகனத்தில் 3கிலோவாட் அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணிர் இறைக்க , இல்லங்களில் உள்ள விளக்குகளுக்கு உபோகிக்க முடியும்.
தமிழகம் உள்பட கேரளா ,ஒடிசா , கர்நாடகா போன்ற மாநிலங்களில் விரைவில் பிஎஸ்4 இன்ஜின்வகையில் கிடைக்க உள்ள மல்டிக்ஸ் மேலும் 100க்கு மேற்பட்ட நகரங்களில் வருகின்ற டிசம்பர் 2016க்குள் விரிவுப்படுத்த ஐஷர் திட்டமிட்டுள்ளது.
போலரிஸ் – ஐஷர் மல்டிக்ஸ் பற்றி கூறுகையில் 18,00,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மிக கடினமான சாலைகள் , ஆஃப் ரோடுகள் என பலவற்றில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் மல்டிக்ஸ் வாகனம் சோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மல்டிக்ஸ் மூன்று பயன்கள்