ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டிசைனை பெற்ற 125சிசி ஸ்கூட்டரின் பிரிவில் டெஸ்டினி 125 மாடலின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
2025 Hero Destini 125
ரெட்ரோ ஸ்டைல் பல்வேறு ந,vவீனத்துவமான வசதிகள் சேர்க்கப்பட்டு VX, ZX மற்றும் ZX+ என மூன்று வகைகளில் மாறுபட்ட வசதிகளில் லிட்டருக்கு 47 கிமீ முதல் 50 கிமீ வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது. தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மைலேஜ் 59 கிமீ வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷனை பெற்ற இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1862மிமீ, அகலம் 703மிமீ மற்றும் உயரம் 1125 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1302மிமீ பெற்று 162மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது.
5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்டுள்ள டெஸ்டினி 125 ஸ்கூட்டர் 115 கிலோ எடை கொண்டு முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு 12 அங்குல வீல் பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டு முன்புறத்தில் 90/90 – 12 மற்றும் பின்புறத்தில் 100/80 – 12 டயர் உள்ளது.
கூடுதலாக டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.
- Destini 125 VX – ₹ 84,135
- Destini 125 ZX – ₹ 92,985
- Destini 125 ZX+ – ₹ 93,985
(ex showroom)
2025 Hero Destini 125 on-Road Price Tamil Nadu
ஹீரோ மோட்டோகார்ப் டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
- Destini 125 VX – ₹ 84,135
- Destini 125 ZX – ₹ 92,985
- Destini 125 ZX+ – ₹ 93,985
(on-road Price in Tamil Nadu)
- Destini 125 VX – ₹ 84,135
- Destini 125 ZX – ₹ 92,985
- Destini 125 ZX+ – ₹ 93,985
(on-road Price in Pondicherry)
டெஸ்டினி 125 வேரியண்ட் விபரம்
VX மாடலில் வழக்கமன அனலாக் கிளஸ்ட்டர், முன்புறம் வழங்கப்பட்டுள்ள குரோம் பினிஷ் செய்யப்பட்ட இன்சர்ட், டிரம் பிரேக் உடன் வெள்ளை கருப்பு, சிவப்பு என மூன்று நிறங்கள் ஆனது வழங்கப்படுகின்றது.
டாப் ZX+ வேரியண்டில் வெள்ளை, கருப்பு நிறத்துடன் அதே க்ரோம் பாகம் காப்பர் ஃபினிஷ் செய்யப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், டிஸ்க் பிரேக், டைமண்ட் கட் அலாய் வீல், ஒளிரும் வகையிலான ஸ்டார்ட் சுவிட்ச், ஆட்டோ ரீசெட் இண்டிகேட்டர் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.
நடுத்தர ZX வேரியண்டில் மெகன்டா (பிங்க்), ப்ளூ என இரு நிறங்களுடன் காப்பர் ஃபினிஷ் மட்டும் இல்லை.
ஹீரோ டெஸ்டினி 125 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 52.4 x 57.8 mm |
Displacement (cc) | 124.6 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 9hp at 7,000 rpm |
அதிகபட்ச டார்க் | 10.4Nm @ 5,250rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | அட்ஜெஸ்டபிள் சிங்கிள் சஸ்பென்ஷன் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm/ டிஸ்க் 190மிமீ |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90 – 12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 100/80 – 12 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V- 4Ah /ETZ-5 MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1862 mm |
அகலம் | 703 mm |
உயரம் | 1125 mm |
வீல்பேஸ் | 1302 mm |
இருக்கை உயரம் | 770 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 162 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.3 litres |
எடை (Kerb) | 115 kg |
ஹீரோவின் டெஸ்டினி 125 நிறங்கள்
சிவப்பு, ப்ளூ, பிங்க், கருப்பு மற்றும் வெள்ளை என 5 விதமான நிறங்களை மட்டும் கொண்டதாக டெஸ்டினி 125 மாடல் கிடைக்கின்றது.
2025 Hero Destini 125 rivals
2025 ஹீரோ டெஸ்டினி 125சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆக்டிவா 125, ஆக்செஸ் 125 ஜூபிடர் 125, யமஹா ஃபேசினோ தவிர ஜூம் 125 டியோ 125, அவெனிஸ் 125, டிவிஎஸ் என்டார்க் 125 உட்பட ஏப்ரிலியா SR125 தவிர உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
Faqs About Hero Destini 125
ஹீரோ டெஸ்டினி 125 என்ஜின் விபரம் ?
124.6cc என்ஜின் பொருத்தப்பட்டு 7,000rpm-ல் அதிகபட்சமாக 9 hp பவர் மற்றும் 5,500rpm-ல் 10.4 NM டார்க் கொண்டு சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
ஹீரோ டெஸ்டினி 125 மைலேஜ் எவ்வளவு ?
ஹீரோ டெஸ்டினி 125 மைலேஜ் லிட்டருக்கு 48-50 கிமீ வரை வழங்கும்.
ஹீரோ டெஸ்டினி 125 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.99,206 முதல் ரூ.1.13 லட்சம் வரை அமைந்துள்ளது.
2025 டெஸ்டினி 125 போட்டியாளர்கள் ?
டெஸ்டினி 125 மாடலுக்கு சவாலாக ஆக்டிவா 125, ஆக்செஸ் 125, ஜூபிடர் 125, யமஹா ஃபேசினோ உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளுகின்றது.