பிஎம்டபிள்யூ மோட்டார்டு வெளியிட்ட F 450 GS அட்வென்ச்சர் கான்செப்ட்டின் உற்பத்தி நிலை மாடலை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் புதிய பேரலல் ட்வீன் சிலிண்டர் 450cc எஞ்சின் இடம்பெற உள்ளது.
BMW F 450 GS
ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட உள்ள பேரலல் ட்வீன் சிலிண்டர் 450சிசி எஞ்சின் கொண்ட எஃப் 450 ஜிஎஸ் அதிகபட்சமாக 48 hp வரை பவரை வெளிப்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிசைன் வடிவமைப்பு சந்தையில் உள்ள R 1300 GS பைக்கிலிருந்து பெறப்பட்டதாக அமைந்திருக்கின்றது.
முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டு 175 கிலோ எடைக்கு குறைவாக அமைந்திருப்பதுடன் 19 அங்குல முன்புறத்தில் பெற்று 17 அங்குல வீல் பெற்று டியூப்லெஸ் டயரை பயன்படுத்தும் வகையில் கிராஸ் வயர்-ஸ்போக் வீல் கொண்டதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கான்செப்ட் நிலை மாடலுக்கு பெரும்பாலான டெக் வசதிகளை பெரிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் இருந்து பெற்றிருக்கும் நிலையில் உற்பத்தி நிலை மாடலுக்கு ஏற்ற சில மாறுதல்கள் இருக்கலாம்.