2025 ஆம் ஆண்டிற்கான புதிய ரோனின் 225 பைக்கின் மிட் வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ், புதிய நிறங்கள் உள்ளிட்ட சிறிய மாறுதல்களை கொண்டு ஆரம்ப விலை ரூ.1.35 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடர்ந்து கிடைக்கின்றது.
TVS Ronin
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல், எஞ்சின் உட்பட டிசைன் அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கின்றது. 2025 டிவிஎஸ் ரோனின் மோட்டார் சைக்கிளில் 225.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.1 HP பவர் மற்றும் 19.93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
யூஎஸ்டி ஃபோர்க் ( மிட் மற்றும் டாப் வேரியண்டில் கோல்டு நிறத்தில்) மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு 17 அங்குல வீல் கொண்டுள்ள மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு, கனெக்ட்டிவிட்டி வசதிகளை டாப் வேரியண்ட் பெறுகின்ற நிலையில் மற்ற வேரியண்டுகளில் கனெக்ட்டிவ் வசதிகள் இல்லை.
- Ronin Base Black – ₹ 1,35,000
- Ronin Base Red – ₹ 1,37,500
- Ronin Mid Silver – ₹ 1,59,490
- Ronin Mid Ember – ₹ 1,60,990
- Ronin Top Grey , Blue – ₹ 1,72,700
(Ex-showroom)