கிளாசிக் க்ரூஸர் ரகத்தில் வரவுள்ள ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியிலான நைட்ஸ்டர் 440 பைக்கினை விற்பனைக்கு அடுத்து 6 மாதங்களில் சந்தைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சந்தையில் உள்ள ஹார்லி எக்ஸ்440, மேவ்ரிக் 440 பைக்கிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை பகிர்ந்து கொள்ள உள்ளது.
Harley-Davidson Nightster 440
சந்தையில் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்ற ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள உள்ள நைட்ஸ்டர் 440ல் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
கூடுதலாக வரவுள்ள க்ரூஸர் பைக் ஏற்கனவே ஹார்லி விற்பனை செய்து வருகின்ற நைட்ஸ்டர் அடிப்படையிலான வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டு சிறிய அளவிலான மாற்றங்களுடன் அமைந்திருக்கலாம்.
குறிப்பாக இந்த க்ரூஸர் மாடல் மீட்டியோர் 350 உட்பட ஹோண்டா வெளியிட திட்டமிட்டுள்ள ரீபெல் 350 க்ரூஸர் ஆகியவற்றை எதிர்கொள்ளலாம். விலை அனேகமாக ரூ.2.40 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.