மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின்ஸ் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள புதிய XEV 9e மாடலில் 79Kwh மற்றும் 59Kwh பெற்றுள்ள பேட்டரி பேக் பெற்று ஆரம்ப ஆன்-ரோடு விலை ரூ.23.54 லட்சம் முதல் துவங்குகின்றது.
பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு துவங்கப்பட்டு முதற்கட்டமாக மார்ச் மாதம் முதல் 79Kwh பேட்டரி பேக் பெற்ற டாப் வேரியண்ட் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
Mahindra XEV 9e on-road price
எக்ஸ்இவி 9இ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.21.90 லட்சம் துவங்குகின்ற நிலையில், இதன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது.
Variant | Ex-showroom Price | on-road Price |
Pack One (59kWh) | Rs 21,90,000 | Rs 23,54,980 |
Pack Two (59kWh) | Rs 24,90,000 | Rs 26,94,010 |
Pack Three Select (59kWh) | Rs 27,90,000 | Rs 30,13,065 |
Pack Three (79kWh) | Rs 30,50,000 | Rs 32,79,080 |
கொடுக்கப்பட்டு விலையில் சார்ஜர் இணைக்கப்படவில்லை, ஆனால் கட்டாயம் சார்ஜர் வாங்க வேண்டும் என்ற மஹிந்திரா கூறுகின்றது. எனவே, 7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை வாங்கும் பொழுது ரூ.75,000 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை எக்ஸ்இவி 9இ 59Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பவர் 231hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 542 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.
அடுத்து, டாப் வேரியண்ட் 79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள XEV 9e வேரியண்ட் பவர் 286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.