சென்னையின் புறநகர பகுதியில் அமைந்துள்ள அம்பத்தூரில் முதன்முறையாக இந்தியாவிற்கான புதிய ’R ஸ்டோர் கான்செப்ட் முறையிலான டீலரை ரெனால்ட் இந்தியா நிறுவனம் துவங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து ரெனால்ட் டீலர்ஷிப்களும் இந்த புதுமையான வடிவமைப்பை ஏற்றுக்கொள்ளுவதுடன் அம்பத்தூர் டீலர்ஷிப் இந்த சர்வதேச தரத்தை முதன்முதலில் வெளிப்படுத்துகிறது.
இந்தியா மீதான இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்ற நிலையில், ரெனால்ட்டின் புதிய ஆர் ஸ்டோர் ஆனது புதிய தோற்ற அடையாளத்தையும் (NVI – New Visual Identity) வழங்குகிறது, இதில் ரெனோவின் புதிய லோகோ மற்றும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட முகப்பு தோற்றத்தை பெற்றுள்ளது.
டீலர் துவக்க நிகழ்ச்சியில் பேசிய ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. எம்.வெங்கட்ராம்.,
“அம்பத்தூர் டீலர்ஷிப் தொடங்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ரெனால்ட்டின் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. புதிய ‘ஆர் ஸ்டோர் வடிவமைப்பை நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இந்தியா மாறியது, ரெனால்ட்டின் இந்தியா உத்தியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ரெனால்ட்டின் உலகளாவிய திட்டங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது, விரைவில், நாடு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டீலர்களை காணலாம், பாராட்டப்பட்ட தயாரிப்புகள், மறுவரையறை செய்யப்பட்ட விற்பனை அனுபவம் மற்றும் உலகளவில் பாராட்டப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும்.” என குறிப்பிட்டார்.
நடப்பு 2025 ஆம் ஆண்டில், ரெனோ நிறுவனம் (NVI- New Visual Identity) தோற்றத்தை வெளிப்படுத்தும் 100 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை புதுப்பிக்கவும், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த மாற்றத்தை அனைத்து டீலர்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி மீண்டும் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.