இந்தியாவில் நிறுவனத்தின் மற்றொரு குறைந்த ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற மாடலாக விளங்கும் 250 அட்வென்ச்சர் பைக்கினை விற்பனைக்கு ரூ.2.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற 390 அட்வென்ச்சர் போலவே ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.
2025 KTM 250 Adventure
டியூக் 250 பைக்கில் உள்ள அதே 249சிசி எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ள 250 அட்வென்ச்சர் மாடல் அதிகபட்சமாக 9250rpm-ல் 31PS மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் பெற்றுள்ளது.
ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு அட்ஜெஸ்ட் செய்ய இயலாத வகையிலான 200 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 200 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.
14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டு 160 கிலோ எடையுள்ள பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 17 அங்குல வீல் வழங்கப்பட்டு அலாய் வீல் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 100/90 டயரும் பின்புறத்தில் 130/80 டயரும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ஏபிஎஸ் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
இந்த மாடலும் 390 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் எக்ஸ் போலவே 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற கேடிஎம் கனெக்ட் ஆப் மூலம் இணைக்கலாம். கூடுதலாக யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.
வெள்ளை, ஆரஞ்ச் என இரண்டு நிறங்களை பெற்று முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விரைவில் விநியோகம் துவங்கப்பட உள்ளது.