மஹிந்திரா நிறுவனத்தின் புதிய BE 6 மற்றும் XEV 9e என இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு முன்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில் முழு விலை பட்டியல் மற்றும் விநியோக விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இரு மாடல்களும் 79kWh மற்றும் 59kWh என இரு மாறுபட்ட பேட்டரி பேக் கொண்டாலும் வசதிகள், ஸ்டைல் உட்பட ரேஞ்ச் அனைத்திலும் பல்வேறு மாறுதல்களை கொண்டுள்ளது. பிப்ரவரி 14, 2025 காலை 9 மணி முதல் XEV 9e மற்றும் BE 6 என இரண்டுக்கும் முன்பதிவு தொடங்குகிறது.
Mahindra BE 6
59kWh வேரியண்ட் 231hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ரேஞ்ச் 535 கிமீ (ARAI) மற்றும் டாப் 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 286hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 682Km (ARAI) அல்லது 550km ரேஞ்ச் (WLTP) வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Pack one 59kWh, Pack on Above 59kWh என இரண்டும் டெலிவரி ஆகஸ்ட் 2025 முதல் துவங்க உள்ள நிலையில், Pack Two 59Kwh ஜூன் 2025 முதல், ஜூலை 2025 முதல் Pack Three Select 59Kwh மற்றும் டாப் Pack Three 79Kwh மார்ச் 2025 முதல் துவங்க உள்ளது.
- Pack One (59kWh) – ரூ. 18.90 லட்சம்
- Pack One Above (59kWh) – ரூ. 20.50 லட்சம்
- Pack Two (59kWh) – ரூ. 21.90 லட்சம்
- Pack Three Select (59kWh) – ரூ. 24.50 லட்சம்
- Pack Three (79kWh)- ரூ. 26.90 லட்சம்
Mahindra XEV 9e
59kWh வேரியண்ட் 231hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ரேஞ்ச் 542 கிமீ (ARAI) ஆகவும், டாப் 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 286hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 656Km (ARAI) அல்லது 533km ரேஞ்ச் (WLTP) வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Pack one 59kWh டெலிவரி ஆகஸ்ட் 2025 முதல் துவங்க உள்ள நிலையில், Pack Two 59Kwh ஜூன் 2025 முதல், ஜூலை 2025 முதல் Pack Three Select 59Kwh மற்றும் டாப் Pack Three 79Kwh மார்ச் 2025 முதல் துவங்க உள்ளது.
- Pack One (59kWh) – ரூ. 21.90 லட்சம்
- Pack Two (59kWh) – ரூ. 24.90 லட்சம்
- Pack Three Select (59kWh) – ரூ. 27.90 லட்சம்
- Pack Three (79kWh)- ரூ. 30.50 லட்சம்
மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள விலை பட்டியலில் சார்ஜருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 7.2kW AC சார்ஜருக்கு கூடுதலாக ரூ.50,000 அல்லது 11.2kW AC சார்ஜருக்கு ரூ.75,000 வசூலிக்கிறது, அதோடு பொருத்துவதற்கு கட்டணம் தனியாக வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், அனைத்து வகைகளுக்கும் டெலிவரி நேரத்தில் விலைகள் மாறுபடும் எனவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.