சமீபத்தில் நிக்கழ்ந்து வரும் அமெரிக்க அரசியல் மாற்றங்கள் ஃபோர்டு மீண்டும் இந்திய சந்தைக்கு நுழைவதில் தாமதமாகலாம் என்ற செய்தியை ஃபோர்டு முற்றிலும் மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபோர்டின் தொழிற்சாலையை மீண்டும் துவக்க திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.
ஃபோர்டு நிறுவனத்தின் அறிக்கையில், சமீபத்தில் வெளியான தாமதம் குறித்தான அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், எங்களின் திட்டங்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. “உலகளாவிய சந்தைகளுக்கு சேவை செய்ய சென்னையில் உள்ள உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் எங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.”
ஃபோர்டு இந்தியாவில் எப்போது உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறவில்லை, மேலும் “உற்பத்தி வகை, காலக்கெடு மற்றும் பிற விவரங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் பகிரப்படும், மேலும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள எங்களிடம் எதுவும் இல்லை” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு ஆலையை துவங்கினால் எவெரஸ்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.