2025 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூன்றாம் தலைமுறை அமேஸ் காரின் ஆன்-ரோடு விலை ரூ.9.80 லட்சம் முதல் துவங்குன்ற நிலையில் டாப் வேரியண்டில் அதிநவீன ஓட்டுநர் உதவி பாதுகாப்பு (ADAS) அமைப்பினை பெற்றதாக கிடைக்கின்றது.
மூன்றாம் தலைமுறை மட்டுமல்லாமல் இரண்டாம் தலைமுறை அமேஸ் காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.
2025 Honda Amaze on-road Price
Variant | Ex-showroom Price | on-road Price |
V MT | Rs 8,09,900 | Rs 9,81,364 |
VX MT | Rs 9,19,900 | Rs 11,08,432 |
ZX MT | Rs 9,99,900 | Rs 12,02,543 |
V CVT | Rs 9,34,900 | Rs 11,24,654 |
VX CVT | Rs 10,14,900 | Rs 12,34,091 |
ZX CVT | Rs 11,19,900 | Rs 14,08,542 |
கூடுதலாக மெட்டாலிக் நிறத்தை பெறுகின்ற மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8,000 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.
2025 அமேஸ் காரின் பாதுகாப்பு சார்ந்த ஆறு ஏர்பேக்குகள் உடன் லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ESC மற்றும் ஹோண்டா சென்சிங் ADAS தொகுப்பு கொண்டுள்ளது.
2nd Gen Honda Amaze on-road Price
முந்தைய தலைமுறை அமேஸ் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் பின்வருமாறு;-
Variant | Ex-showroom Price | on-road Price |
E MT | Rs 7,19,500 | Rs 8,67,054 |
S MT | Rs 7,57,300 | Rs 9,05,064 |
S* MT | Rs 7,62,800 | Rs 9,11,654 |
VX MT | Rs 8,98,500 | Rs 10,69,765 |
VX* MT | Rs 9,04,000 | Rs 10,76,312 |
S CVT | Rs 8,47,100 | Rs 10,21,433 |
S* CVT | Rs 8,52,600 | Rs 10,27,097 |
VX CVT | Rs 9,80,500 | Rs 11,56,143 |
VX* CVT | Rs 9,86,000 | Rs 11,62,211 |
கூடுதலாக மெட்டாலிக் நிறத்தை பெறுகின்ற மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6,000 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.