சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் SF 155 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
2025 Suzuki Gixxer SF 155
புதிய நேக்டூ ஸ்டைல் ஜிக்ஸர் 155 பைக்கின் அடிப்படையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஜிக்ஸர் SF 155 புதுப்பிக்கப்பட்ட மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் தொடர்ந்து மாறுதல் இல்லாமல் வந்தாலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் என மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki Eco Performance) நுட்பத்தினை பெற்று 155cc என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 13.6hp பவர், 13.8NM டார்க் ஆனது 6000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
2025 Gixxer SF பைக் மாடலின் பரிமாணங்கள் 2,025 மிமீ நீளம், 715 மிமீ அகலம், 1035 மிமீ உயரம் கொண்டு இதன் வீல்பேஸ் 1,340 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஸ்விங்கார்ம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 100/80-17M/C 52P மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P டயருடன் இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டர் டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ப்ளூடூத் மூலம் இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
- GIXXER SF (OBD-2B) Rs. 1,51,635
- GIXXER SF Special Edition (OBD-2B) Rs. 1,52,137
(Ex-showroom)
Suzuki Gixxer SF 155 on-Road Price Tamil Nadu
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- GIXXER SF (OBD-2B) Rs. 1,79,632
- GIXXER SF Special Edition (OBD-2B) Rs. 1,80,453
(All Prices on-road Tamil Nadu)
- GIXXER SF (OBD-2B) Rs. 1,66,654
- GIXXER SF Special Edition (OBD-2B) Rs. 1,67,432
(All Prices on-road Pondicherry)
2025 சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 155 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் ஆயில் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 56mm x 62.9mm |
Displacement (cc) | 155 cc |
Compression ratio | 10:01 |
அதிகபட்ச பவர் | 13.6 hp at 8000 rpm |
அதிகபட்ச டார்க் | 13.8 Nm at 6000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமண்ட் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 276 mm (ABS) |
பின்புறம் | டிஸ்க் 220 mm |
வீல் & டயர் | |
சக்கர வகை | கேஸ்ட் அலாய் |
முன்புற டயர் | 100/80-17M/C 52P ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 140/60R17M/C 63P ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 4.0Ah MF |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2030 mm |
அகலம் | 715 mm |
உயரம் | 1035 mm |
வீல்பேஸ் | 1360 mm |
இருக்கை உயரம் | 795 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165 mm |
எரிபொருள் கொள்ளளவு | 12 litres |
எடை (Kerb) | 148 Kg |
சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் நிறங்கள்
கிரே உடன் பச்சை, வெள்ளை உடன் நீலம் மற்றும் கருப்பு என மூன்று விதமான நிறங்களில் ஜிக்ஸர் SF 155 பைக்கின் 2025 மாடல் கிடைக்கின்றது.
2025 Suzuki Gixxer SF 150 Rivals
இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஃபேரிங் ஸ்டைல் மாடலான யமஹா R15 V4, பல்சர் ஆர்எஸ் 200 உட்பட கேடிஎம் ஆர்சி 200 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Faqs சுசூகி ஜிக்ஸர் SF
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?
ரூ.1.79 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை சுசூகி ஜிக்ஸர் SF 155 ஆன்ரோடின் விலை அமைந்துள்ளது.
சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
சுசூகி ஜிக்ஸர் SF 155 மைலேஜ் லிட்டருக்கு 43 கிமீ வரை கிடைக்கும்.
சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 155 வேரியண்ட் விபரம் ?
ஃபேரிங் ஸ்டைல் கொண்ட ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்கில் டிஸ்க் மற்றும் ஸ்பெஷல் எடிசன் என இரண்டு உள்ளது.
சுசூகி ஜிக்ஸர் 155 என்ஜின் விபரம் ?
155cc என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 13.6hp பவர், 13.8NM டார்க் ஆனது 6000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.