இந்தியாவின் இலகுரக டிரக் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிரீமியம் வசதிகளை பெற்ற 1120 கிலோ எடை சுமக்கும் திறன் பெற்ற சாத்தி (Ashok Leyland SAATHI) டிரக்கின் ஆரம்ப விலை ரூ.6,49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நவீன LNT தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதால் AdBlue-க்கான தேவையை நீக்கி, செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்கின்ற 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டூ மூன்று சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 45 HP ஆனது 3300 RPM-லும் 110Nm டார்க்கினை 1000-2400 RPM-ல் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக ரிவர்ஸ் கியர் பெற்றுள்ளது.
5 வருடம் அல்லது 2 லட்சம் கிமீ உத்தரவாதம் மற்றும் சிறந்த சவாரி வசதியுடன் சாத்தி டிரக்கின் மூலம் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகளை கொண்டிருக்கின்றது.
மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 4406மிமீ நீளம், 1663 மிமீ அகலம் மற்றும் உயரம் 1833 மிமீ கொண்ட டிரக்கின் வீல்பேஸ் 2250மிமீ ஆக உள்ள நிலையில் கார்கோ பாடியின் (LxBxH) 2500 X 1620 X 380 mm கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வாகனத்தின் எடை GVW (Gross Vehicle Weight) 2288 கிலோ ஆக உள்ளது. அசோக் லேலண்டின் சாத்தி டிரக்கிற்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டெலிவரி துவங்கப்பட உள்ளது.