பிரபலமான சூப்பர் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி 2024 ஆம் வருடத்தில் இந்தியாவில் 113 கார்களையும் சர்வதேச அளவில் சுமார் 10,687 கார்களை டெலிவரி வழங்கிய முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 6 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் இறுதி ஹூராகேன் 2025 ஆம் ஆண்டில் டெலிவரி வழங்கப்பட உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ரிவோல்டோ சூப்பர் காரின் விற்பனை 2026 ஆம் ஆண்டு வரை நிறைவுற்றள்ளதாக தனது அறிக்கையில் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டில் 113 யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இது 2023ல் விற்கப்பட்ட 103 யூனிட்களிலிருந்து 10 சதவீதம் அதிகமாகும்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை லம்போர்கினியின் மிகப்பெரிய பிராந்திய சந்தையாக 4,227 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டு, முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் டெலிவரிகள் 3,712 யூனிட்களாக வழங்கப்பட்டு, இது சுமார் 7 சதவீதம் வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில் ஆசியா-பசுபிக் பிராந்தியத்தில் விற்பனை மொத்தம் 2,748 யூனிட்களை பதிவு செய்து 3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.