ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
2025 Honda SP125
புதிய SP125 பைக்கினை பொறுத்தவரை ஷைன் 125 பைக்கின் எஞ்சின் உட்பட சில அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் என பல்வேறு மாற்றங்களை 2025 மாடல் பெற்றுள்ளது.
புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2025 எஸ்பி 125 பைக்கில் கருப்பு, நீளம், கிரே, சிவப்பு மற்றும் சைரன் நீலம் என 5 வித நிறங்களை கொண்டு பரிமாணங்களில் 2,020 மிமீ நீளம், 785 மிமீ அகலம் மற்றும் 1,103 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,285 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 790 மிமீ மற்றும் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
முன்புறத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டு பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 18 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 80/100-18M/C 47P மற்றும் பின்புறத்தில் 100/80-18M/C 53P டயருடன் இருபக்க டயர்களிலும் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ டிரம் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.
2025 மாடலில் மிக முக்கியமாக கிராபிக்ஸ் தவிர 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ஹோண்டாவின் ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகளுடன் கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
- SP125 Drum Rs. 94,584
- SP125 Disc Rs. 1,03,096
(Ex-showroom)
Honda SP 125 on-Road Price Tamil Nadu
2025 ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
- SP125 Drum Rs. 1,15,098
- SP125 Disc Rs. 1,25,796
(All Prices on-road Tamil Nadu)
- SP125 Drum Rs. 1,07,097
- SP125 Disc Rs. 1,16,987
(All Prices on-road Pondicherry)
ஹோண்டா எஸ்பி 125 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் ஆயில் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 50.0 X 63.1 mm |
Displacement (cc) | 123.94 cc |
Compression ratio | 10:01 |
அதிகபட்ச பவர் | 10.8 hp (8Kw) at 7500 rpm |
அதிகபட்ச டார்க் | 10.9 Nm at 6000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமண்ட் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 276 mm (ABS) |
பின்புறம் | டிஸ்க் 220 mm / 130 mm டிரம் |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 80/100-18M/C 47P ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 100/80-18M/C 53P ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 4.0Ah MF |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2020 mm |
அகலம் | 785 mm |
உயரம் | 1103 mm |
வீல்பேஸ் | 1285 mm |
இருக்கை உயரம் | 790 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
எரிபொருள் கொள்ளளவு | 11.2 litres |
எடை (Kerb) | 116 kg |
ஹோண்டாவின் எஸ்பி125 நிறங்கள்
இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பேர்ல் சைரன் ப்ளூ, இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் என ஐந்து விதமான நிறங்களில் 2025 மாடல் எஸ்பி125 கிடைக்கின்றது.
2025 Honda SP125 Rivals
இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் N125 பல்சர் NS125, ஹீரோ கிளாமர் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.
Faqs ஹோண்டா எஸ்பி125
Warning: Undefined array key "name" in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/seo-by-rank-math-pro/includes/modules/schema/shortcode/faqpage.php on line 31
2025 ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?
2025 ஹோண்டா எஸ்பி125 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.26 வரை அமைந்துள்ளது.
2025 ஹோண்டா SP125 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
2025 ஹோண்டா SP125 பைக்கின் மைலேஜ் 56-59 கிமீ வழங்குகின்றது.
எஸ்பி 125 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் N125 பல்சர் NS125, ஹீரோ கிளாமர் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை நேரடியாக எஸ்பி 125 எதிர்கொள்ளுகின்றது.
எஸ்பி 125 பைக்கின் வேரியண்ட் விபரம் ?
டிரம் பிரேக்குடன் முன்புற டயர் அல்லது டிஸ்க்குடன் முன்புற டயர் பெற்று பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.