இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
2025 Honda Activa 125
இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா பிராண்டின் கீழ் கிடைக்கின்ற 125சிசி என்ஜின் கொண்ட மாடல் சற்று பிரீமியம் வசதிகளுடன் விளங்குகின்றது.
ஆக்டிவா ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் அமைந்துள்ள மாடலில் OB2B இணக்கமான ஏர்-கூல்டு, 123.92cc HET OBD2B என்ஜின் பொருத்தப்பட்டு 6,250rpm-ல் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 10.3 NM டார்க் வழங்குகின்றது. இதில் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
அன்டர் போன் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1850மிமீ, அகலம் 707மிமீ மற்றும் உயரம் 1170 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1260 மிமீ பெற்று 162மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.
இந்த மாடலின் இருக்கைக்கான நீளம் 712 மிமீ மற்றும் 5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 109 முதல் 110 கிலோ எடை கொண்டு முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மாடல் என்ற பெருமையை மட்டுமல்லாமல் கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டு முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 90/100-10 53J டயர் உள்ளது.
சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டத்துடன் H-ஸ்மார்ட் கீ பெற்ற ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. இதனால், ஸ்டார்ட் செய்ய சைடு லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் திறப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். பார்க்கிங்கில் உள்ள ஸ்கூட்டரை கண்டறியவும் இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்கூட்டர் திருட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2025 மாடலின் முக்கிய வசதிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுவது புளூடூத் இணைப்புடன் கூடிய புதிய 4.2-இன்ச் TFT கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.
- ACTIVA 125 DLX Rs.1,00,223
- ACTIVA 125 H-SMART Rs.1,04,229
(Ex-showroom)
2025 Honda Activa 125 on-Road Price Tamil Nadu
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
- ACTIVA 125 DLX Rs.1,24,543
- ACTIVA 125 H-SMART Rs.1,28,987
(on-road Price in TamilNadu)
- ACTIVA 125 DLX Rs.1,13,654
- ACTIVA 125 H-SMART Rs.1,17,876
(on-road Price in Pondicherry)
ஹோண்டா ஆக்டிவா 125 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 50 x 63.113 mm |
Displacement (cc) | 123.92 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 8.1 hp (6.11 Kw) at 6,250 rpm |
அதிகபட்ச டார்க் | 10.4Nm @ 5,000rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm/ டிஸ்க் 190மிமீ |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/100-10 53J ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-3.0Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1850 mm |
அகலம் | 707 mm |
உயரம் | 1170 mm |
வீல்பேஸ் | 1260 mm |
இருக்கை உயரம் | 770 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 162 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.3 litres |
எடை (Kerb) | 109 kg (drum) – 110 kg (Disc) |
ஹோண்டா ஆக்டிவா 125 நிறங்கள்
கருப்பு, கிரே மெட்டாலிக், கிரவுண்ட் கிரே, ப்ளூ, ரெட் மெட்டாலிக், மற்றும் வெள்ளை என 6 விதமான பெற்றதாக ஆக்டிவா 125 கிடைக்கின்றது.
2025 Honda Activa rivals
2025 ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக ஜூபிடர் 125, டெஸ்டினி 125, டியோ 125 உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
Faqs About Honda Activa 125
ஹோண்டா ஆக்டிவா 125 என்ஜின் விபரம் ?
OB2B இணக்கமான ஏர்-கூல்டு, 123.92cc HET OBD2B என்ஜின் பொருத்தப்பட்டு 6,250rpm-ல் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 10.3 NM டார்க் வழங்குவதுடன் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
2025யின் ஹோண்டா ஆக்டிவா 125 மைலேஜ் எவ்வளவு ?
ஹோண்டா ஆக்டிவா 125 மைலேஜ் லிட்டருக்கு 44-45 கிமீ வரை வழங்கும்.
ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.24 லட்சம் முதல் ரூ.1.28 லட்சம் வரை அமைந்துள்ளது.
2024 ஆக்டிவா 125 போட்டியாளர்கள் ?
125சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக ஜூபிடர் 125, டெஸ்டினி 125, டியோ 125 உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
2025 ஹோண்டா ஆக்டிவா 125 H-SMART வசதிகள் என்ன ?
H-ஸ்மார்ட் கீ பெற்ற ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளுடன் ஸ்டார்ட் செய்ய சைடு லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் திறப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம்.
2025 Honda Activa 125 Scooter Image Gallery