இரண்டாம் தலைமுறை 2016 ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் ₹. 49.50 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான இன்ஜின் ஆப்ஷனுடன் வந்துள்ளது. 2016 ஜாகுவார் XF மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
மிக சிறப்பான ஸ்டைலிசான ஜாகுவார் எக்ஸ்எஃப் காரில் 2.0 லிட்டர் இன்ஜினியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் பவர் 177 hp மற்றும் டார்க் 430 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ப்யூர் , பிரஸ்டெஜ் , போர்ட்ஃபோலியோ என மூன்று வேரியண்டிலும் கிடைக்கும்.
பிரஸ்டெஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பவர் 237 hp மற்றும் 340 Nm ஆகும் .இதில் இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.0 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
ஜாகுவார் எக்ஸ்எஃப் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 13.12 கிமீ மற்றும் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 19.33 கிமீ ஆகும். ஜாகுவார் டிரைவ் கன்ட்ரோல் மோடினை கொண்டுள்ள என்ஜின் வாயிலாக ஸ்டாண்டர்டு ,இகோ ,டைனமிக் அல்லது ரெயின்/ஐஸ்/ஸ்னோ ஆகியவற்றை பெறலாம்.
போர்ட்ஃபோலியோ வேரியண்டில் 10.2 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்டச் கன்ரோல் புரோ சிஸ்டம் , 18 இஞ்ச் அலாய் வீல்கள், 14 முறைகளில் எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள்
2016 ஜாகுவார் எக்ஸ்எஃப் விலை பட்டியல்
Jaguar XF Diesel Pure: ₹49.50 Lakh
Jaguar XF Diesel Prestige: ₹ 55.90 Lakh
Jaguar XF Diesel Portfolio: ₹ 62.10 Lakh
Jaguar XF Petrol Prestige: ₹ 55.65 Lakh
Jaguar XF Petrol Portfolio: ₹ 61.85 Lakh
(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )