மஹிந்திரா நிறுவனத்தின் ஒரே ஹேட்ச்பேக் கார் மாடலான வெரிட்டோ வைப் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த வெரிட்டோ வைப் பெரிதாக வெற்றி பெறாமல் குறைந்த எண்ணிக்கையிலே விற்பனை ஆகி வந்தது.
ரெனோ-மஹிந்திரா கூட்டணியில் உருவான வெரிட்டோ செடான் காரினை அடிப்படையாக கொண்ட வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த தொடக்கம் முதலே பெரிதான வரவேற்பினை பெறாமலே இருந்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெறும் 625 வைப் கார்கள் மட்டுமே விற்பனை செய்யபட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் விற்பனையில் வெறும் 32 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் வைப் உற்பத்தியை மஹிந்திரா நிறுத்தியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
கடந்த மூன்று நிதி வருடங்களில் 2013-2014 ஆம் வருடத்தில் 5,213 அலகுகள் , 2014-2015 ஆம் நிதி ஆண்டில் 1,361 அலகுகள் , 2015-2016 ஆம் நிதி ஆண்டில் 619 என தொடர்ச்சியாக சரிவினை சந்தித்துள்ளதால் இந்த நிதி ஆண்டில் முழுதாக நிறுத்தப்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைப் காரில் ரெனோ கே9கே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆற்றல் 64 பிஎச்பி மற்றும் டார்க் 180என்எம் ஆகும். மஹிந்திரா வைப் மைலேஜ் லிட்டருக்கு 20.8கிமீ ஆகும்.