ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் காரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ரயீத் காரின் பல விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் கார் கோஸ்ட் காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. V12 6.6 லிட்டர் டிவீன் டர்போ சார்ஜடு எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர்.
ரயீத் பவர்ஃபுல் எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 624எச்பி ஆகும். இதன் டார்க் 800என்எம் ஆகும். இதன் ஆற்றல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரினை விட 61எச்பி அதிகம் ஆகும். 4.4 விநாடிகளில் 100 கீமி வேகத்தை தொட்டுவிடும். ZF 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் ஜூலை மாதம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.