டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் மஹிந்திரா மோஜோ 300 பைக் அதிகபட்சமாக 26 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 295cc லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.
முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த மோஜோ யுடி 300 மற்றும் மோஜோ எக்ஸ்டி 300 என அறியப்பட்ட மாடல் மோஜோ 300 ஏபிஎஸ் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ்
மஹிந்திரா நிறுவனம், ஜாவா மோட்டார்சைக்கிள் அறிமுகத்தை தொடர்ந்து மீண்டும் மோஜோ பைக்கில் 295cc லிக்யூடு கூல்டு என்ஜின் எஃப் பொருத்தப்பட்டு, 26 ஹெச்பி குதிரைத்திறனை 7500rpm சுழற்சியில் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வரவுள்ளது.
மோஜோ தொடர்ந்து ட்வீன் பாட் ஹெட்லைட்டை பெற்று எல்இடி ரன்னிங் விளக்குகள் பெற்றுள்ளது. மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கில் பைரெல்லி சோர்ஸ் செய்யப்பட்ட டயர்களுடன் காணப்பட்டது. இருப்பினும், மஹிந்திரா எம்ஆர்எஃப் டயரினை பெற்றதாகவும் வரக்கூடும். பிரேக்கிங் சிஸ்டத்தில் 320 மிமீ மற்றும் 240 மிமீ டிஸ்க்குகளை முறையே பைபிரே நிறுவன காலிப்பர்களுடன் கொண்டதாக அமைந்திருக்கும்.
ஷோரூமில் மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் மாடல் பைக் விலை ரூபாய் 1.88 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்கப்படுகின்றது.
source – indianautosblog