நாடு முழுவதும் பெனெல்லி நிறுவனத்தின் முன்பதிவில் இம்பீரியல் 400 பைக்கிற்கு 700க்கு மேற்பட்ட முன்பதிவுகளை முதல் மாதத்தில் கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபலமான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ஜாவா 42 , ஜாவா போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. கிளாசிக் 350 நீண்ட காலமாக இந்திய சந்தையின் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்று அபரிதமான வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த பைக்கில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.
இந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களான ஜாவா மாடல் ரூ. 1.64 லட்சம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.54 லட்சம் வரை கிடைக்கின்றது.