கைனெட்டிக் கீரின் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள இ-லூனா (Kinetic E-Luna) எலக்ட்ரிக் மொபெட்டினை அறிமுக விலை ரூ.69,990 துவங்குகின்ற மாடலின் பயணிக்கும் வரம்பு 110 கிமீ ஆக உள்ள நிலையில், 10 பைசா செலவில் ஒரு கிமீ பயணிக்கிலாம் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
1970களில் வெளியிடப்பட்ட லூனா தோற்ற வடிவமைப்பு முந்தைய ICE மாடலை போலவே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் நவீனத்துவத்தை கைனெட்டிக் நிறுவனம் எலக்ட்ரிக் லூனா மாடலுக்கு கொண்டு வந்துள்ளது.
Kinetic E-Luna Electric Moped
கைனெட்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள பேட்டரி எலக்ட்ரிக் இ-லூனா மொபெட்டில் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 நிறங்களை கொண்டுள்ள மாடலில் 2.50 -16 அங்குல ஸ்போக்டூ வீல் பெற்று லக்கேஜ் எடுத்துச் செல்ல ஏதுவாக பின்புற இருக்கை நீக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும் பைக்கின் எடை வெறும் 96 கிலோ எடை கொண்டது. இருக்கை உயரம் வெறும் 760 மிமீ ஆகவும், வீல்பேஸ் 1,335 மிமீ மற்றும் 170 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உள்ளது.
இ-லூனா எலக்ட்ரிக் மாடலில் இடம்பெற்றுள்ள 2kWh Li Ion NMC பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 110km ரேஞ்ச் கிடைக்கும் என இந்நிறுனம் குறிப்பிட்டுள்ளது. கைனெட்டிக் E-Luna மாடலின் BLDC மோட்டார் பவர் 1.2kW மற்றும் அதிகபட்சமாக 50kmph வேகத்தில் செல்லும் திறனை பெற்றுள்ளது.
220V, 15A, 3 பின் போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜிங் செய்ய 4 மணிநேரம் என்று கூறப்பட்டுள்ளது. இ-லூனாவுக்கு 40,000 கிமீ அல்லது 36 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகின்றது.
இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் யூஎஸ்பி சார்ஜர் போர்ட், சைடு ஸ்டாண்டு சென்சார், டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.
Kinetic E-Luna prices list
- E-Luna X1 – ₹ 69,990
- E-Luna X2 – ₹ 74,990
கருப்பு கலர் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை, மற்ற 4 நிறங்களும் ரூ.1,500 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் எனவே கைனெட்டிக்கின் இ லூனா விலை ரூ.71,490 முதல் ரூ.76,490 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது. முன்னணி இ-காமர்ஸ் வலைதளங்களின் மூலமாகவும் இந்த மாடலை வாங்கலாம்.
(ex-showroom)