ரெனோ இந்தியா நிறுவனத்தின் க்விட் காரின் அடிப்படையிலான 7 இருக்கை எம்பிவி காரின் பெயர் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) என பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ட்ரைபரை விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொடக்கநிலை சந்தையில் வெளியான க்விட் காரின் அடிப்படையிலான CMF-A பிளாட்பாரத்தில் உருவாக்கப்படுகின்ற டிரைபர் மாடலில் 7 இருக்கையுடன் மிகவும் தாரளமான இடவசதி பெற்ற மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனோ ட்ரைபர் கார் விபரம்
தொடக்கநிலை சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய க்விட் காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட உள்ள இந்த எம்பிவி கார் மிகவும் ஸ்டைலிஷாகவும், நவீனத்துவமான எல்இடி ரன்னிங் விளக்குடன், நேர்த்தியான முகப்பு விளக்கு பெற்றிருக்கும்.
டட்சன் கோ பிளஸ் காரினை போல அல்லாமல், சிறப்பான மூன்றாவது இருக்கை வரிசை பெற்றதாகவும், லக்கேஜ் ஸ்பேஸ் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
க்விட் காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு இந்த மாடலை விட கூடுதலான எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக விபரங்கள் இனி தொடர்ந்து ரெனோ ட்ரைபர் எம்பிவி பற்றி தெரியவரும் இணைந்திருங்கள்..,