ரூ.7.05 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள டொயோட்டா கிளான்ஸா கார் முன்பாக விற்பனை செய்யப்பட்டு வரும் பேஸ் வேரியண்டை விட ரூ.24,000 குறைவாக வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி அடிப்படையான வேரியண்டில் உள்ள வசதிகள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது. விற்பனைக்கு கடந்த ஜூன் 2019-ல் வெளியிடப்பட்ட கிளான்ஸா பலேனோ காரினை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த நாள் முதல் தற்போது வரை 11,000 வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டூயல் ஜெட் மைல்டு ஹைபிரிட் 1.2 லிட்டர் என்ஜின் ஆப்ஷனை பெற்ற மாடல் பலேனோ காரில் உள்ள Zeta SHVS பெட்ரோல் மாடலுக்கு இணையான அம்சத்தை பெற்ற G MT SHVS மாடல் 64812 ரூபாய் குறைவாக அமைந்துள்ளது. பொதுவாக இரு வேரியண்டுகளின் வசதிகளில் எந்த குறைவும் இல்லை.
மாருதியின் பலேனோ காரில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஹைபிரிட் மாடலை கிளான்ஸாவும் கொண்டிருக்கும், 90 ஹெச்பி பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12N மற்றும் G MT வேரியண்டில் K12M என்ஜின் 83 ஹெச்பி பவர் மற்றும் 113 NM டார்க் வழங்குகின்றது. பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு இரு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் G வேரியன்டில் மட்டும் பொருத்தப்பட்டு 5 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் கிடைக்கும்.
மைலேஜ் விபரத்தை பொருத்தவரை K12M MT லிட்டருக்கு 21.01 கிமீ ஆகும். அடுத்து K12N ஸ்மார்ட் ஹைபிரிட் மைலேஜ் 23.87 கிமீ ஆகும்.
கிளான்சா போட்டியாளர்கள்
மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களை நேரடியாக தனது போட்டியால் சந்திக்க கிளான்ஸா உள்ளது.
கிளான்ஸா விலை மற்றும் வாரண்டி
G MT (83PS engine): ரூ. 7.05 லட்சம்
G MT (90PS engine, mild hybrid): ரூ. 7.29 லட்சம்
G CVT (83PS engine): ரூ. 8.37 லட்சம்
V MT (83PS engine): ரூ. 7.68 லட்சம்
V CVT (83PS engine): ரூ. 9.00 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் சென்னை)
இந்த காருக்கு வாராண்டி காலம் மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்க உள்ளது. இதுதவிர வரும் காலத்தில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் இந்நிறுவனம் வழங்க உள்ளது.