ரூ.9.89 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி மாடலில் பல்வேறு நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முந்தைய மாடலை விட ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது.
முன்பாக 18 வேரியண்டுகள் கிடைத்து வந்த செல்டோஸில் இப்போது 16 வேரியண்டுகளாக குறைக்கப்பட்டு, 1.4T-GDI GTK மற்றும் GTX 7DCT என இரு வேரியண்டுகளுக்கு போதிய வரவேற்பில்லாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த கிரெட்டா எஸ்யூவி காருக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
புதிய கியா செல்டோஸ் வசதிகள்
குறிப்பாக தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. HTX+ மற்றும் GTX+ என இரு வேரியண்டுகளில் டூயல் டோன் பெற்று புதிதாக ஆரஞ்சு உடன் வெள்ளை நிற மேற்கூறை பெற்றுள்ளது. மற்றபடி HTK+/HTX/HTX+/GTX/GTX+ வேரியண்டுகளில் பின்புற பம்பர் புதுப்பிக்கப்பட்டு இரட்டை புகைப்போக்கியை பெற்றுள்ளது.
மேலும் பாதுகாப்பு சார்ந்த அவசரகால நிறுத்துவதற்கான சிக்னல் (Emergency Stop Signal- ESS) அனைத்து வேரியண்டுகளிலும், ஸ்மார்ட் கீ ரிமோட் சிஸ்டம் தற்போது ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளில் உள்ளது.
செல்டோஸ் கார்களில் இடம்பெற்றுள்ள HTX, HTX+, GTX மற்றும் GTX+ போன்றவற்றில் இப்போது கனெக்கட்டிவிட்டி சார்ந்த UVO “Hello Kia” வாய்ஸ் அசிஸ்ட், ஸ்மார்ட் வாட்ச் ஆப் தொடர்பு, ஏர் ப்யூரிஃபைர் கன்ட்ரோல், இந்திய விடுமுறை நாட்கள் தகவல் மற்றும் கிரிக்கெட் ஸ்கோர் விபரத்தை அறிய வாய்ஸ் மூலமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்போது அனைத்து வேரியண்டிலும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், HTX மற்றும் GTX வேரியண்டுகளில் எல்இடி ரூம் லேம்ப், மெட்டல் ஸ்கஃப் பிளேட் உள்ளது. GTX மற்றும் GTX+ வேரியண்டில் கருப்பு நிற இன்டிரியர் இணைக்கப்பட்டுள்ளது.
கியா செல்டோஸ் என்ஜின்
புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.
இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.
புதிய கியா செல்டோஸ் முழு விலை பட்டியல்
செல்டோஸ் பெட்ரோல் 1.5 HTE – ரூ. 9.89 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.5 HTK – ரூ. 10.49 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.5 HTK+ – ரூ. 11.59 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.5 HTX – ரூ. 13.34 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.5 HTX iVT – ரூ. 14.34 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.4 Turbo GTX – ரூ. 15.54 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.4 Turbo GTX+ – ரூ. 16.39 லட்சம்
செல்டோஸ் பெட்ரோல் 1.4 Turbo GTX+ 7DCT – ரூ. 17.29 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTE – ரூ. 10.34 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTK – ரூ. 11.69 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTK+ – ரூ. 12.69 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTK+ 6AT – ரூ. 13.69 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTX – ரூ. 14.44 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTX+ – ரூ. 15.49 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 HTX+ 6AT – ரூ. 16.49 லட்சம்
செல்டோஸ் டீசல் 1.5 GTX+ 6AT – ரூ. 17.34 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)
4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் வென்யூ அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் செல்டோஸ் அடிப்படையில் மின் காரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.