ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. என்ஜின் மாசு உமிழ்வுக்கு இணையான மேம்பாட்டை மட்டுமே பெற்றுள்ளது.
விற்பனையில் கிடைத்து வந்த பிஎஸ்4 மாடலை விட ரூ.9,000 முதல் அதிகபட்சமாக டீசல் மாடல் ரூ.51,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாசு உமிழ்வு என்ஜினை தவிர தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.
ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ (மேனுவல்) , 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ (மேனுவல்) 21 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
அமேஸ் பெட்ரோல்:
Amaze E MT: ரூ. 6.09 லட்சம்
Amaze S MT: ரூ. 6.81 லட்சம்
Amaze V MT: ரூ. 7.44 லட்சம்
Amaze VX MT: ரூ. 7.92 லட்சம்
Amaze S CVT: ரூ. 7.71 லட்சம்
Amaze V CVT: ரூ. 8.34 லட்சம்
Amaze VX CVT: ரூ. 8.75 லட்சம்
அமேஸ் டீசல்:
Amaze E MT:ரூ. 7.55 லட்சம்
Amaze S MT: ரூ. 8.11 லட்சம்
Amaze V MT: ரூ. 8.74 லட்சம்
Amaze VX MT: ரூ. 9.22 லட்சம்
Amaze S CVT: ரூ. 8.91 லட்சம்
Amaze V CVT: ரூ. 9.54 லட்சம்
Amaze VX CVT: ரூ. 9.95 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)