Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
16 March 2020, 5:23 pm
in Car News
0
ShareTweetSend

88875 hyundai creta launched

ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

கிரெட்டாவின் முகப்பில் வழங்கப்பட்டு வந்த கிரில் அமைப்பில் புதிய கேஸ்கேடிங் அமைப்புடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகளும் உள்ளது.

காரின் பக்கவாட்டினை பொறுத்தவரை புதிய இரட்டை நிறத்திலான அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட வீல் ஆர்ச் கொண்டுள்ளது. அதேபோல, பின்புறத்தில் விற்பனையில் உள்ள மாடலின் எல்இடி டெயில் லைட் பெற்றிருப்பதுடன் பம்பரில் சிறிய அளவிலான மாறுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்திலான டாஷ்போர்டு மிக நேரத்தியான வடிவமைப்பைப் பெறுகிறது. இந்த மாடலில் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்டீயரிங்கில் ஆடியோ, புளூடூத் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் கட்டுப்பாடுகளைப் பெறுகிறது.

d675e 2020 hyundai creta suv

1f758 2020 hyundai creta interior

ஏசி வென்ட்களுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள பெரிய 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் திரையுடன் இந்த கார் முழு டிஜிட்டல் கிளஸ்டரை பெறுவதுடன், இதில்  ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியை பெறுகின்றது. எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் குளிரூட்டப்பட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்படுகின்றது.

கிரெட்டா எஸ்யூவி காரில் தற்போது பிஎஸ்6 ஆதரவுடன் கூடிய மூன்று என்ஜினை பெற உள்ளது. குறிப்பாக இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜினை பெறுகின்றது.

என்ஜின்பவர்டார்க்கியர்பாக்ஸ்மைலேஜ்
1.5L பெட்ரோல்115 PS144 Nm6 வேக MT16.8 km/l
1.5L பெட்ரோல்115 PS144 NmCVT 17.1 km/l
1.4L டர்போ பெட்ரோல்140 PS242 Nm7 வேக DCT16.8 km/l
1.5L டர்போ டீசல்115 PS250 Nm6 வேக MT21.4 km/l
1.5L டர்போ டீசல்115 PS250 Nm6 வேக AT18.3 km/l

 

செல்டோஸ் மாடலுக்கு மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தவல்ல கிரெட்டா காரும் ஒரே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு ஒரே என்ஜின்களை பகிர்ந்து கொள்ளுகின்றன.

hyundai creta news in tamil

2020 ஹூண்டாய் கிரெட்டா விலை பட்டியல்

Hyundai Creta VariantsPetrol 1.5 MPiPetrol 1.4 GDIDiesel 1.5 CRDi
E––ரூ. 9.99 லட்சம்
EXரூ. 9.99 லட்சம்–ரூ. 11.49 லட்சம்
Sரூ. 11,72 லட்சம்–ரூ. 12.77 லட்சம்
SXரூ. 13,46 லட்சம்–ரூ. 14.51 லட்சம்
SX (AT/iVT/DCT)ரூ. 14,94 லட்சம்ரூ. 16.16 லட்சம்ரூ. 15.99 லட்சம்
SX(O)––ரூ. 15.79 லட்சம்
SX(O) (AT/iVT/DCT)ரூ. 16.15 லட்சம்ரூ. 17.20 லட்சம்ரூ. 17.20 லட்சம்

 

இந்த மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan