ஹாரியர் அடிப்படையிலான கிராவிட்டாஸ் கான்செப்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடலான டாடா சஃபாரி மற்றும் சஃபாரி அட்வென்ச்சர் எஸ்யூவி விலை ரூ.14.69 லட்சம் முதல் ரூ.21.45 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவமான டிசைன் அம்சங்களை கொண்டு பல்வேறு புதிய தலைமுறைக்கான வசதிகளை பெற்று விளங்குகின்றது.
H7X என்ற பெயரில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட பின்பு, பஸ்ஸார்டு எனவும், பிறகு கிராவிட்டாஸ் என அறியப்பட்ட நிலையில் இறுதியாக சஃபாரி என உறுதிப்படுத்தப்பட்டு OMEGARC பிளாட்ஃபாரத்தில் ஹாரியர் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பினை நினைவுப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்றது.
சஃபாரி இன்ஜின் சிறப்புகள்
ஹாரியர் இடம்பெற்றிருக்கின்ற இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற சஃபாரியில் 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர்மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
மிக சிறப்பான மற்றும் நேர்த்தியான டிரைவிங் அனுபவத்தினை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சஃபாரியில் ரைடிங் டைனமிக்ஸ் மிக நேரத்தியாக பவரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் சிறப்பான ஒரு அனுபவத்தை டாடா வழங்குகின்றது. இந்த காரில் ஈக்கோ,சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம் பெற்றுள்ளது. கரடு முரடான சாலைகளில் பயணிக்கும் போது ரஃப் ரோடு மோடு இணைக்கப்பட்டுள்ளது.
சஃபாரி பேட்ஜ் பெற்றிருந்தாலும், தற்போதைக்கு 4X4 ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் இணைக்கப்படவில்லை.
டிசைன் மற்றும் இன்டிரியர் வசதிகள்
டாடாவின் கார்களில் இடம்பெறுகின்ற ட்ரை ஏரோ வடிவிலான மிக நேர்த்தியான க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட டாடாவின் கிரில் அமைப்பு கவருகின்ற நிலையில் புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள் அமைந்துள்ளன. டாப் வேரியண்டில் 18 அங்குல அலாய் வீல், மற்றவற்றில் ஹாரியரை போன்றே 16 அங்குல வீல் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு கார்களுக்கான வீல் பேஸ் முறையில் மாற்றமில்லாமல் நீளம் மட்டும் 63 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டாடா சஃபாரி லேண்ட் ரோவர் D8 பிளாட்ஃபாரதிதன் Optimal Modular Efficient Global Advanced Architecture or OMEGARC வடிவமைக்கப்படுட 4661 மிமீ நீளம், 1786 மிமீ உயரம், மற்றும் 1894 மிமீ அகலம் பெற்றுள்ளது.
iRA or Intelligent Real Time Assist கனெக்டேட் நுட்பத்துடன் 8.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் (நடுத்தர வேரியண்டுகளில் 7.0 அங்குல் சிஸ்டம்) சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டிருக்கின்றது.
புதிய சஃபாரியில் XE, XM, XT, XT+, XZ, மற்றும் XZ+ என மொத்தமாக 6 வேரியண்டுகளை பெற்றுள்ளது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், பனோரமிக் சன்ரூஃப், ஹில் டீசனட் கட்டுப்பாடு, குழந்தை இருக்கை ஐஎஸ்ஓஃபிக்ஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கட்டுப்பாடு ஆகியவை எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESP) பெற்றுள்ளது.
Tata Safari Price List
2021 Tata Safari prices | |
Variant | Price |
XE | Rs 14.69 lakh |
XM | Rs 16.00 lakh |
XMA | Rs 17.25 lakh |
XT | Rs 17.45 lakh |
XT+ | Rs 18.25 lakh |
XZ | Rs 19.15 lakh |
XZA | Rs 20.40 lakh |
XZ+ | Rs 19.99 lakh |
XZA+ | Rs 21.25 lakh |
Adventure Edition MT | Rs 20.20 lakh |
Adventure Edition AT | Rs 21.45 lakh |