Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஸ்பை படங்கள் வெளியானது

by MR.Durai
27 March 2019, 7:33 am
in Bike News
0
ShareTweetSend

Royal Enfield Thunderbird news in tamil

க்ரூஸர் ரக  மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்கின் புதிய மாடலின் சோதனை ஓட்ட பங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய தண்டர்பேர்ட் 350, தண்டர்பேர்ட் 500 பைக்கில் பிஎஸ் 6 என்ஜின் இடம் பெற்றிருக்கலாம்.

நேற்றைக்கு , ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள் படங்கள் வெளியானதை தொடர்ந்து அடுத்து என்ஃபீல்டு தண்டர்பேர்டு படங்களை பவர்டிரிஃப்ட் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதுதவிர , புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 மற்றும் 500 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய என்ஃபீல்டு தண்டர்பேர்ட்  சிறப்புகள்

சில மாதங்களுக்கு முன்னதாக தண்டர்பேர்ட் மாடலில் அலாய் வீல் ஆப்ஷன் ஒற்றை இருக்கை என பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்ற தண்ர்பேர்டு எக்ஸ் விற்பனைக்கு வந்தது. தற்போது அடுத்த தலைமுறை தண்டர்பேர்டில் , மேம்படுத்தப்பட்ட பவர் , டார்க் வழங்கவல்ல புதிய  என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மற்றும் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 பைக்குகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

கிளாசிக் பைக்கில் சோதனை செய்யப்பட்டதை போன்றே டிஸ்க் பிரேக் வலதுபுறம் மாற்றப்பட்டு, செயின் இடதுபுறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெயில் விளக்கு, முன் மற்றும் பின் மட்கார்டில் சிறிய மாற்றங்கள், மற்றும் எல்இடி ஹெட்லைட் புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேம்பட்ட ஷாக் அப்சார்பர் , இருக்கையின் சொகுசு தன்மை அதிகரிப்பு போன்றவற்றுடன் மாறுபட்ட புகைப்போக்கி என பல்வேறு அம்சங்களுடன் கிக் ஸ்டார்ட்ர் இல்லாத மாடலாக விளங்கலாம்.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு விலை

பொதுவாக பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் கிக் ஸ்டார்ட்டரை இழக்க தொடங்கியுள்ளதால், என்ஃபீல்டு நிறுவனம், இதே செயற்பாட்டை ஒரு சில மாடல்களில் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

image source – power drift

Related Motor News

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

Tags: Royal EnfieldRoyal Enfield Thunderbird
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan