பெர்ஃபாமென்ஸ் மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான தோற்றம் பெற்று விளங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிதாக மெட்டாலிக் ப்ளூ, மெட்டாலிக் கிரே ஆகிய இரண்டு புதிய நிறங்களை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் என்டார்க் 125
கடந்த பிப்ரவரி 2018யில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட மஞ்சள், வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய நான்கு நிறங்களை பெற்றதாக வந்த நிலையில் , தற்போது கூடுதலாக மெட்டாலிக் ப்ளூ, மெட்டாலிக் கிரே நிறங்கள் இணைக்கப்பட்டு விலையில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.
புதிய CVTi-REVV 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.
0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்டார்க் 125 ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ ஆகும்.
முதன்முறையாக ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும். இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைட் ஆப் போன்ற 55 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.
சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 125சிசி ஸ்கூட்டர்களில் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் ஸ்மார்டான ஆதரவுகளை பெற்று விளங்குகின்ற நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும், அப்ரிலியா எஸ்ஆர்125, ஹோண்டா கிரேஸியா 110 ஆகிய மாடல்களுக்கு கடுமையான சவாலினை விடுக்கும் வகையில் என்டார்க் 125 ஸ்கூட்டர் விளங்குகின்றது.
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விலை ரூ.63,950 (Ntorq 125 Scooter price in Chennai )