சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், நேக்டூ ஸ்ட்ரீட் மாடலாக புதிய ஜிக்ஸர் 250 பைக்கினை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்பாக ஃபேரிங் ரக மாடல் ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி பதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.
ஜிக்ஸர் 250 அதன் சுசுகி ஜிக்ஸர் 150 ஸ்டைலிங் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லேம்ப் வடிவமைப்பு, டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஸ்பிளிட் இருக்கைகள், நேர்த்தியான எஸ்டென்னுடன் கூடிய பெட்ரோல் டேங்க், டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், 250சிசி மாடலில் கூடுதலாக கிக்ஸ்சருக்கு ஒரு முக்கிய பிளாஸ்டிக் பெல்லி பான் வழங்கப்பட்டுள்ளது.
249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. சுஸூகி ஜிக்ஸர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆகும்.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஜிக்ஸர் 250 பைக்கில் டூயல் டோன் சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்கள் , கருப்பு நிறத்தில் வந்துள்ளது.
இந்தியாவில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விலை ரூ. 1.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)