ஜாவா பைக் மைலேஜ் எவ்வளவு என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. மீண்டும் இந்தியாவில் கால பதித்துள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் மைலேஜ் விபரம் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 37.5 கிமீ என ஆராய் சான்றளித்துள்ளது.
ஜாவா மற்றும் ஜாவா ஃபார்ட்டி டூ என இரு பைக்குகளிலும் ஒரே 293 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் முன்பாக விற்பனையில் உள்ள மஹிந்திரா மோஜோ மாடலில் உள்ளதாகும்.
ஜாவா பைக் மைலேஜ் எவ்வளவு ?
பொதுவாக 200க்கு அதிக சிசி பெற்ற பைக்குகளில் மைலேஜ் என்பது பற்றி பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் பேசும் பொருளாக இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நீண்ட காத்திருப்புக்கு பிறகு டெலிவரி தொடங்கப்பட்ட ஜாவா பைக்குகளின் மைலேஜ் தற்போது கிடைத்துள்ளது.
ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா என இரு மாடல்களிலும் இந்நிறுவனத்தின் இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.
ஜாவா, ஜாவா 42 என இரு மாடல்களின் மைலேஜ் லிட்டருக்கு 37.5 கிலோமீட்டர் என ARAI (Automotive Research Association of India) சான்றழித்துள்ளது.
ஆராய் மைலேஜ் என்பது பைக்கின் ஒட்டுதல் திறன் மற்றும் பல்வேறு காரணங்களால் மாறக்கூடியதாகும். எனவே, பொதுவாக இந்த பைக்ககின் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 26 கிமீ முதல் 32 கிமீ வரை கிடைக்கப்பெறலாம் என கருதப்படுகின்றது.
மேலும் வாசிங்க – நிறுவனங்கள் தருகின்ற மைலேஜ் வருவதில்லை ஏன் ? தெரியுமா.!
தற்போது 77க்கு மேற்பட்ட நகரங்களில் 95 டீலர்களை பெற்றுள்ள இந்நிறுவனம் பைக்குகளின் டெலிவரியை தொடங்கியுள்ளது.
ஜாவா பைக் விலை பட்டியல்
ஜாவா – ரூ. 1.64 லட்சம்
ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)
ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்
ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)
(டெல்லி விற்பனையக விலை)
தொடர்ந்து ஜாவா பைக்கின் செய்திகள் வாசிக்கலாம்