ஸ்டைலிஷான தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S (Hero Xtreme 200S) பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு ரூ.98,500 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் ஃபேரிங் செய்யப்பட்ட 200சிசி பைக் மாடலாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் விளங்குகின்றது.
எக்ஸ்ட்ரீம் 200 ஆர் அடிப்படையில் வெளியான 94,000 ரூபாயில் எக்ஸ்பல்ஸ் 200டி, 97,000 ரூபாயில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எஃப்ஐ என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் 200 மாடல் 1.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S
மிகவும் ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
200சிசி என்ஜின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 18.4 ஹெச்பி பவர் மற்றும் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
ப்ளூடூத் ஆதரவை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலம் டரன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், அற்புதமான ஏரோடைனமிக்ஸ் அம்சத்தை பெற்ற ஃபேரிங் பேனல்கள் கொண்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக காட்சியளிக்கின்றது.
37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 ஸ்டெப் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் 17 அங்குல வீல் கொண்டு 276 mm டிஸ்க் முன்புறத்தில், 220 mm டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க – ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T சிறப்புகள்
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற சுசுகி ஜிக்ஸர் SF, பல்ஸர் RS 200, யமஹா YZF-R15 V3.0 போன்ற மாடல்களை எதிர்க்கும் வல்லமை கொண்ட புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S விலை ரூ. 98,500 ஆகும்.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – ரூ.97,000
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 FI – ரூ.1,05,000
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T – ரூ.94,000
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் – ரூ.98,500
(டெல்லி எக்ஸ்-ஷோரூம்)