ஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்த சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது மேக்ஸி ஸ்டைல் பர்க்மேன் ஸ்டீரிட் 125 மாடலின் விநியோகத்தை துவங்கியுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ. 77,900 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் (Suzuki Eco Performance) கூடிய 8.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கின்றது. முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் எனப்படும் பாதுகாப்பு சார்ந்த பிரேக்கிங் அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது.
மேலும் பிஎஸ்6 மாடலை பொறுத்தவரை ஈசி ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் மெட்டாலிக் மேட் சிவப்பு நிறத்தை கூடுதலாக பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட அதிகபட்சமாக ரூ.6900 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.