பிரசத்தி பெற்ற பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஸ்பிளிட் சீட் வெர்ஷனில் டிரம் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக டிஸ்க் பிரேக் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் குறைந்த விலை டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.
பல்சர் 125 நியான் மற்றும் பல்சர் 125 ஸ்பிளிட் சீட் என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது. இந்த மாடலில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 ஹெச்பி 8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.
பல்சர் 125 பைக்கின் பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது 170 மிமீ டிரம் பிரேக் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது. ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.
பஜாஜ் பல்சர் 125 விலை பட்டியல்
பல்சர் 125 நியான் டிரம் – ரூ.75,066
பல்சர் 125 நியான் டிஸ்க் – ரூ.79,866
பல்சர் 125 ஸ்பிளிட் சீட் டிரம் – ரூ.76,218
பல்சர் 125 ஸ்பிளிட் சீட் டிஸ்க் – ரூ.83,162
(விற்பனையக விலை சென்னை)
Web Title : Bajaj Pulsar 125 Split Seat gets drum variant launched at Rs. 76,218