4 மீட்டருக்கு குறைந்த நீளத்தைப் பெற்ற கியா சோனெட் கான்செப்ட் எஸ்யூவி காரை முதன்முறையாக கியா இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. விற்பனைக்கு வரும் பண்டிகை காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கியா நிறுவனத்தின் தலைமையான ஹூண்டாய் கார் தயாரிப்பாளரின் வென்யூ எஸ்யூவி பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட உள்ள சோனெட் பல்வேறு காம்பேக்ட் எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ளது. குறிப்பாக ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ளது.
மிக ஸ்டைலிஷாகவும், அதேநேரத்தில் தனது பாரம்பரியமான டைகர் நோஸ் கிரிலை கொண்டதாக டீசர் செய்துள்ளது. தட்டையான ஹெட்லைட் பெற்று அதன் மேற்பகுதியில் எல்இடி ரன்னிங் விளக்குள், அகலமான ஏர் டேம் போன்றவை கொண்டிருக்கின்றது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்சு, ஸ்டைலிஷான அலாய் வீல் டிசைன் மற்றும் சில்வர் இன்ஷர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.
வென்யூ காரில் உள்ள என்ஜினை பெற உள்ள இந்நிறுவன எஸ்யூவி பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.
மற்ற விபரங்கள் – ஆட்டோ எக்ஸ்போ 2020