இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி வகிக்கும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஜனவரி மாத கார் விற்பனையில் டாப் 10 கார் மாடல்களில் 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா மற்றும் டாடா மோட்டார்ஸ் என மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 கார் மாடல்கள் – ஜனவரி 2018
மாருதி ஆல்டோ காரை பின்னுக்கு தள்ளி புதிய மாருதி டிசையர் கார் சந்தையை கைப்பற்றியுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 6வது இடத்தில், எலைட் ஐ20 8வது இடத்தில் மற்றும் க்ரெட்டா எஸ்யூவி 9வது இடத்திலும் உள்ளது.
10வது இடத்தில் பயணிகள் வாகன விற்பனையில் புதிய வளர்ச்சியை பெற்றுவரும் டாடா மோட்டார்சின் டியாகோ கார் இடம்பெற்றுள்ளது. முதல் 5 இடங்களை மாருதி நிறுவனத்தின் டிசையர்,ஆல்ட்டோ, பலேனோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலும் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து முழுமையான 2018 ஜனவரி மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.
விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – ஜனவரி 2018
வ. எண் | தயாரிப்பாளர் | ஜனவரி – 2018 |
1. | மாருதி சுசூகி டிசையர் | 22,540 |
2. | மாருதி சுசூகி ஆல்டோ | 19,134 |
3. | மாருதி சுசூகி பலேனோ | 17,770 |
4. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 14,445 |
5. | மாருதி சுசூகி வேகன்ஆர் | 14,182 |
6. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 12,109 |
7. | மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 11,785 |
8. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 9,650 |
9. | ஹூண்டாய் க்ரெட்டா | 9,284 |
10. | டாடா டியாகோ (Automobile Tamilan) | 8,284 |