2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 63,310 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள அப்ரிலியா SR 125 ஸ்கூட்டர் மாடல் விற்பனையிலங் உள்ள அப்ரிலியா SR 150 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.
அப்ரிலியா SR 125 ஸ்கூட்டர்
கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா SR 125 ஸ்கூட்டர் மாடல் தற்போது அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்ஆர்150 மாடலின் தோற்ற அமைப்பில் மாறுதல்களை பெறாமல் கிராபிக் டிசைனில் சிறிய அளவிலான மாற்றத்துடன் 125சிசி எஞ்சினை மட்டும் பெற்றுள்ளது.
125 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10 பிஹெச்பி பவர் மற்றும் 10.6 என்எம் டார்க் வழங்கவல்லதாகும். எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் பாகங்களை பெற்றதாக வந்துள்ள இதில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டயரில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 140மிமீ டரம் பிரேக்கினை பெற்றுள்ளது.
அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரை விட ரூ.3000 விலை குறைந்த மாடலாக வெளிவந்துள்ள அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டர் விலை ரூ. 63,310 (எக்ஸ்-ஷோரூம் புனே)
அப்ரிலியா ஸ்ட்ரோம்
இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் அப்ரிலியா ஸ்ட்ரோம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் 12 அங்குல வீலுடன் 125 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10 பிஹெச்பி பவர் மற்றும் 10.6 என்எம் டார்க் வழங்கவல்லதாகும். எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் பாகங்களை பெற்றதாக வந்துள்ள இதில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டயரில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 140மிமீ டரம் பிரேக்கினை பெற்றுள்ளது.