பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள எதிர்கால உயர் ரக பிரிமியம் மாடல்களான 7 சீரிஸ், X7 எஸ்யூவி, வரவுள்ள 8 சீரிஸ் மற்றும் i8 கூபே மற்றும் ரோட்ஸ்டெர் ஆகிய மாடல்களுக்கு கருப்பு, வெள்ளை பிஎம்டபிள்யூ லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ லோகோ
பொதுவாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லோகோ வெள்ளை மற்றும் நீலம் கலந்த கலவையில் இருந்து வருகின்றது. தற்போது நீல வண்ணத்திற்கு பதிலாக கருப்பு நிறம் மத்தியில் சேர்க்கப்பட்டு இந்நிறுவனத்தின் முழுப்பெயர் BMW – Bayerische Motoren Werke என விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் சாதாரண மாடல்களில் வழக்கம் போல இடம்பெற்றிருக்கும் கருப்பு மற்றும் நீலம் பெற்ற லோகோ இடம்பெற்றிருக்கும், பிஎம்டபிள்யூ-யின் உயர்ரக பிரத்யேக மாடல்களாக விளங்கும் 7 சீரிஸ், X7 எஸ்யூவி, வரவுள்ள 8 சீரிஸ் மற்றும் i8 கூபே மற்றும் ரோட்ஸ்டெர் ஆகியவற்றில் மட்டுமே கருப்பு மற்றும் வெள்ளை லோகோ இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லச்சினை கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களுடன் கூடிய புதிய லோகோ கார்பன் ஃபைபர் கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.