புதிதாக சந்தைக்கு வந்த யமஹா ஆர்3 மற்ற இரண்டு பைக்குகளுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 300 விலை கூடுதலாகவும் , கேடிஎம் ஆர்சி 390 விலை குறைவாகவும் உள்ளது.
மூன்று பைக்குளும் முழுதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 300 மற்றும் யமஹா ஆர்3 பைக்கின் தோற்றம் விரைவாக கவரந்திழுக்கின்றது. கேடிஎம் ஆர்சி390 தோற்றம் கிளாசிக் போன்ற வட்ட விளக்குகினை பெற்றுள்ளது.
மூன்று பைக்குகளிலும் பல நவீன வசதிகள் இருந்தாலும் சில முக்கிய அம்சங்களை ஆர் 3 பைக்கில் இல்லை குறிப்பாக ஏபிஎஸ் , சிலிப்பர் கிளட்ச் போன்றவை இல்லை. நின்ஜா 300 பைக்கில் சிலிப்பர் கிளட்ச் உள்ளது. அடுத்து கேடிஎம் RC 390 பைக்கில் சிலிப்பர் கிளட்ச் , ஏபிஎஸ் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் என கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.
ஒப்பீட்டு விளக்க படம்
யமஹா ஆர்3 vs கவாஸாகி நின்ஜா 300 vs கேடிஎம் ஆர்சி 390 – ஒப்பீடு |
ஆர்3 மற்றும் நின்ஜா 300 பைக்குகளில் இரட்டை சிலிண்டர் என்ஜின் உள்ளது. ஆனால் ஆர்சி390 பைக்கில் ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. ஆர்சி390 பைக்கில் 43.5 பிஎஸ் ஆற்றலும் அதனை தொடர்ந்து ஆர்3 மற்றும் நின்ஜா 300 உள்ளது.
விலை
மற்ற இரண்டை விட கேடிஎம் ஆர்சி 390 ரூ.1 லட்சம் வரை விலை குறைவாக உள்ளது. ஆர்3 பைக்கின் விலை நின்ஜா 300 பைக்கை விட ரூ.40000 குறைவாகும். நின்ஜா 300 மற்றும் ஆர்3 பைக்குகள் சிகேடி முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.
யமஹா ஆர்3 பைக் விலை ரூ. 3.25 லட்சம்
கவாஸாகி நின்ஜா 300 பைக் விலை ரூ.3.65 லட்சம்
கேடிஎம் ஆர்சி 390 பைக் விலை ரூ.2.14 லட்சம்
(ex-showroom Delhi)
ஆட்டோமொபைல் தமிழன் பார்வை
கூடுதல் வசதிகள் பெற்றிருந்தாலும் கேடிஎம் ஆர்சி 390 பைக்கை விட யமஹா ஆர்3 சிறப்பாக இருக்கும். அதற்க்கு மேலாக நின்ஜா 300 விளங்கும்.
Yamaha YZF-R3 vs Kawasaki Ninja 300 vs KTM RC390 Comparison