Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

by MR.Durai
7 October 2023, 8:52 am
in Car News
0
ShareTweetSend

tata safari facelift front  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் அடிப்படையிலான 7 இருக்கை கொண்ட சஃபாரி எஸ்யூவி காரின் தோற்றம் இன்டிரியரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய சஃபாரியில் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சத்தில் பெரிதாக மாற்றமில்லை.

முன்பாக இடம்பெற்றிருந்த வேரியண்ட் பெயர்கள் நீக்கப்பட்டு, தற்பொழுது ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்காம்பலிஸ்டு என நான்கு விதமாக கிடைக்க உள்ளது.

2023 Tata Safari Facelift

சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டு எஸ்யூவி காரிலும் பொதுவாக 170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

மேலும் ஃபிரன்ட் வீல் டிரைவ் கொண்ட மாடலில் டெர்ரியன் ரெஸ்பான்ஸ் மோட் (Normal, Rough & wet), மற்றும் (Eco, City & Sports) என டிரைவிங் மோடுகளையும் பெறுகின்றது.

ஹாரியர் எஸ்யூவி காரை விட டாடா சஃபாரி தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான பம்பர் மற்றும் ஏர்டேம் வென்ட் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, பானெட் கீழ்பகுதியில் எல்இடி பார் லைட் உள்ளது.

பக்கவாட்டில் பெரிதாக மாற்றமில்லாமல், தொடர்ந்து வழக்கமான டிசைனை பெற்று 19 அங்குல அலாய் வீல் புதிய டிசைனை கொண்டுள்ளது. பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி டெயில் லைட் மற்றும் எல்இடி பார் லைட், புதிய பம்பர் கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் இரண்டு கார்களும் ஒரே மாதிரியாக பகிர்ந்து கொண்டாலும், பாடி நிறத்திற்கு ஏற்ற டிசைன் இன்ஷர்ட்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. மத்தியில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில் வழங்கப்பட்டு பேஸ் வேரியண்டில் 10.25-இன்ச் மற்றும் டாப் வேரியண்டுகளில் 12.3-இன்ச் ஆக உள்ளது.

tata safari

தொடுதல் மூலம் செயல்படுகின்ற HVAC சுவிட்சுகள் கொண்டு 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக உள்ளது. பல்வேறு வசதிகளை வழங்கும் கிளஸ்ட்டர் உள்ளது. மற்ற வசதிகளில், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு க்விக் ஷிஃப்டர், பின்புற சாளர சன்ஷேடுகள் உள்ளன.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் டாடா சஃபாரி காரில் 360 டிகிரி கேமரா, மற்றும் ADAS சூட் ஆகியவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது 7 ஏர்பேக்குகளைப் பெறும் நிலையில் பொதுவாக இனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு எஸ்யூவிகளுக்கும் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கும் நிலையில், விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

2023 Tata Safari panoramic sunroof 2024 Tata Safari Interior 2024 Tata Safari Rear tata safari

Related Motor News

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

2025 டாடா சஃபாரி அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

ரூ.25.09 லட்சத்தில் வெளியான டாடா ஹாரியர், சஃபாரி ஸ்டெல்த் எடிசன் விபரம்.!

Tags: Tata Safari
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan