இந்திய EV சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்மையான தயாரிப்பாளரான விளங்கும் நிலையில் ஹாரியர் (Harrier.ev) எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட கர்வ், அல்ட்ராஸ், மற்றும் சியரா இவி ஆகியவற்றை அடுத்தடுத்த அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பஞ்ச்.இவி அறிமுகத்தின் போது டாடா வெளியிட்ட ஏக்டிவ் பிளாட்ஃபாரத்தில் (Acti.ev) ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை கர்வ் எஸ்யூவி மாடலை தொடர்ந்து 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
Acti-EV (Advanced Connected Tech-Intelligent Electric Vehicle) பிளாட்ஃபாரத்தில் குறைந்தபட்சம் 300 கிமீ ரேஞ்ச் முதல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்ச் வரை வெளிப்படுத்தக்கூடிய மாடல்கள் இடம்பெற உள்ளது. மேலும் அதிகபட்சமாக 150Kw DC விரைவு சார்ஜரை ஆதரிக்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹாரியர் EV எஸ்யூவி காரில் 60kWh பேட்டரி திறன் கொண்டதாகவும், உண்மையான ரேஞ்ச் 400-500km வரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டூயல் மோட்டார் உடன் ஆல் வீல் டிரைவ் செட் அப் கொண்டதாகவும், சிங்கிள் வீல் டிரைவ் என இரண்டு விதமான வேரியண்ட் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.