வரும் பிப்ரவரி மாதம் ஆக்டேவியா செடான் காரை அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசரை ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என பல்வேறு என்ஜின் ஆப்ஷனில் வெளியிடப்பட உள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள டீசர் மூல்ம் காரின் தோற்றம் பற்றி எந்த டீசரும் வெளிப்படுத்தவில்லை. எல்இடி ஹெட்லைட்டுக்கான புதிய வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றது. புதுப்பிக்கப்பட்ட கிரில் பெற்றதாக அமைந்திருக்கலாம். ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் காரில் முன் மற்றும் பின்புற பம்ப்ர், அலாய் வீல் மற்றும் புதிய டெயில்-லைட் கிளஸ்டர் பெறலாம்.
110hp, 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைபிரிட் பெற்ற 150hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தொடர்ந்து பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர 245hp பவர் 1.4 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெறலாம்.
டேஷ்போர்டில் பெரிய 10-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு பல்வேறு கனெக்டேட் வசதிகளை பெற உள்ளது.
2024 ஸ்கோடா ஆக்டேவியா விற்பனைக்கு இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.