டாடா மோட்டார்ஸ் நிறுவன 2023 ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் விலை ரூ.15.59 லட்சம் முதல் ரூ.24.49 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட வடிவம், மேம்பட்ட இன்டிரியர் மற்றும் ஒரு சில கூடுதல் வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.
குளோபல் NCAP கிராஷ் சோதனைகளின் முடிவில் சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டும் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளும், வயதுவந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 பெற்றுள்ளது. ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+ , அட்வென்ச்சர்+ A மற்றும் ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+ ஆகியவற்றுடன் கூடுதலாக டார்க் எடிசன் மாடலும் ஹாரியரில் கிடைக்கின்றது.
2023 Tata Harrier Facelift
170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
மேலும் ஃபிரன்ட் வீல் டிரைவ் கொண்ட மாடலில் டெர்ரியன் ரெஸ்பான்ஸ் மோட் (Normal, Rough & wet), மற்றும் (Eco, City & Sports) என டிரைவிங் மோடுகளையும் பெறுகின்றது.
ஹாரியர் எஸ்யூவி காரை விட தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட முன்புற கிரில், பம்பர் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்திருக்கலாம். மிக நேர்த்தியான எல்இடி பார் லைட் பானெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டில் மிகப் பெரிய மாற்றங்கள் இல்லாமல், புதிய 19 அங்குல அலாய் வீல் பெற்று, பின்புறத்தில் புதுபிக்கப்பட்ட பம்பர் , புதிய எல்இடி டெயில் லைட் கொண்டுள்ளது.
தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில் வழங்கப்பட்டு பேஸ் வேரியண்டில் 10.25-இன்ச் மற்றும் டாப் வேரியண்டுகளில் 12.3-இன்ச் ஆக உள்ளது.
தொடுதல் மூலம் செயல்படுகின்ற HVAC சுவிட்சுகள் கொண்டு 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக உள்ளது. பல்வேறு வசதிகளை வழங்கும் கிளஸ்ட்டர் உள்ளது. மற்ற வசதிகளில், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு க்விக் ஷிஃப்டர், பின்புற சாளர சன்ஷேடுகள் உள்ளன.
அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் டாடா சஃபாரி காரில் 360 டிகிரி கேமரா, மற்றும் ADAS சூட் ஆகியவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது 7 ஏர்பேக்குகளைப் பெறும் நிலையில் பொதுவாக அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக் உள்ளன.
New Tata Harrier Price list