ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டார் 650 மாடல் ஸ்கிராம்பளர் வகையாக மாற்றப்பட்டு இன்டர்செப்டார் பீர் 650 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் முக்கிய விபரங்கள் படங்கள் மற்றும் அறிமுக விபரம் ஆனது வெளியாகி உள்ளது.
குறிப்பாக அடிப்படையில் 650 சிசி இன்ஜினை பகிர்ந்து கொள்கின்ற இந்த பீர் 650 மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பல்வேறு நிறங்களானது கொடுக்கப்பட்டு அசத்தலான, ஸ்டைலிஷ் ஆன ஸ்கிராம்ப்ளராக விளங்க உள்ளது.
இன்டர்செப்ட்டார் மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்த மாடல் ஆன் ரோடு மட்டுமல்லாமல் ஆஃப் ரோடு பயணங்களுக்கும் ஏற்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற இன்ட்ரசெப்டாரில் இரு பக்கத்திலும் 18 அங்குல டயர் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், பீர் 650 மாடல் ஆனது முன்பக்கத்தில் 19 அங்குல டயர் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல டயர் உள்ளது.
அதேபோல குறைவான ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் எக்ஸ்ஹாஸ்ட் ஆனது சற்று மேல்நோக்கி அமைந்திருப்பதுடன் மிக முக்கியமான மாற்றம் ஒற்றை புகைப்போக்கி (பொதுவாக தற்பொழுது உள்ள என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளில் இரட்டை புகைப் போக்கி உள்ளது) இடம்பெற்றிருக்கின்றது.
ஸ்கிராம்ப்ளர் மாடல்களுக்கு இணையாக பல்வேறு மாற்றங்கள் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆனது கூடுதலாகவும், மிக முக்கியமான மற்றொரு மாற்றம் என்னவென்றால் தற்போது அப்சைட் டவுன் ஃபோர்க்கானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்டர்செப்டாரில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கு ஆனது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நவம்பர் 4ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதே நாளில் இன்ட்ர்செப்டார் பீர் 650 மாடலும் விற்பனைக்கு EICMA2024-ல் வெளியாக உள்ளது.
Imagesource- youtube/grippedia