ரிவர் நிறுவனத்தின் முதல் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலை தற்பொழுது ரூ.1.38 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு முதல் ஷோரூம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் முன்பதிவை துவங்கியுள்ளது.
கடந்த 2023 ஆண்டு துவக்கத்தில் இண்டி ரூ.1.25 லட்சத்தில் வெளியிடப்பட்டு முன்பதிவு நடந்த நிலையில், தற்பொழுது மீண்டும் தனது ஆலையை உற்பத்தி நிலைக்கு சென்றுள்ளதால் விரைவில் டெலிவரி துவங்க திட்டமிட்டுள்ளது.
River indie E scooter
ரிவர் இண்டி மின்சார ஸ்கூட்டரில் IP67 மதிப்பிடப்பட்ட 4 kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை கொண்டு உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வழங்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 800-watt சார்ஜரை கொண்டு சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.
Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்ற இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகிறது. பின்புற சக்கரத்திற்கு பெல்ட் டிரைவ் வழியாக பவர் அனுப்புகிறது. 3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெலிவரி அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ள ரிவர் பெங்களூருவை தொடர்ந்து சென்னை உட்பட முன்னணி மெட்ரோ நகரங்களில் டீலர்களை விரிவுப்படுத்த உள்ளது.
இந்தியாவில் கிடைக்கின்ற டிவிஎஸ் ஐக்யூப், விடா வி1 புரோ, ஏதெர் 450, பஜாஜ் சேட்டக் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ரிவர் இண்டி விலை ரூ.1.38 லட்சம் ஆகும்.