ஒகினவா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள டூயல் பேட்டரி ஸ்கூட்டரில் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 130 கிமீ பயணிக்கும் திறனுடன், பல்வேறு வணிகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டூயல் இ-ஸ்கூட்டர் 250 வாட் எலக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படுகின்ற மணிக்கு அதிகபட்சம் 25 கிமீ வேகத்தில் பயணிக்கவும், 75 கிலோ எடையைக் கொண்டுள்ளது. முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உள்ளது. 48W 55Ah நீக்கும் வகையிலான பேட்டரி 90 நிமிடங்களில் 80 சதவிகிதம் மற்றும் 4-5 மணிநேரங்களில் முழுமையான சார்ஜ் செய்யப்படலாம். இந்நிறுவனம் குறிப்பிடுகையில் முழுமையான பேட்டரியில் பயண வரம்பு 130 கிமீ ஆக விளங்குகின்றது.
வர்த்தகரீதியான பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில், டெலிவரி பாக்ஸ், ஸ்டேக்கபிள் கிரேட்டுகள், மருந்துகளுக்கான குளிர் சேமிப்பு பெட்டிகள், சமையல் சிலிண்டர் கேரியர் மற்றும் ஆய்வகம் போன்ற கூடுதல் கஸ்டமைஸ் வதிகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்குகின்றது.
மேலும், இந்த ஸ்கூட்டரை தனி நபர் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் வகையில் 48V 28AH பேட்டரி 45 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யப்படலாம் மற்றும் சுமார் 2-3 மணி நேரத்தில் முழுமையான சார்ஜூம் 60 கிமீ தூரத்தை ஒரே முறை சார்ஜில் வழங்குகிறது. ரிமோட்-ஆன் செயல்பாடு, பக்க ஃபுட்ரெஸ்ட், ஹார்ட் டாப் ஃப்ளோர், தொலைபேசி ஹோல்டர், சார்ஜிங் போர்ட் மற்றும் வாட்டர் பாட்டில் கேரியர் போன்ற பிற சிறப்பம்சங்கள் அடங்கும்.
ஓகினாவா தனது தயாரிப்புகளில் 92 சதவீத உள்நாட்டின் தயாரிப்பு இலக்கை அடைந்துள்ளது என்றும் ஏப்ரல் 2021 க்குள் 100 சதவீத இலக்காகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒகினாவா டூயல் இ-ஸ்கூட்டர் விலை ரூ.58,988 (எக்ஸ்ஷோரூம்)